'சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...'- ரசிகர்களை எச்சரித்த சல்மான் கான்
|நடிகர் சல்மான் கான், அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், சல்மான் கான் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம் என்று ரசிகர்களை சல்மான் கான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'சல்மான் கானோ அல்லது அவருடன் இணைந்த நிறுவனங்களோ அல்லது குழுக்களோ அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவில்லை என்பதை தெரிவிக்கவே இது.
இந்த நிகழ்வுகளை ஊக்குவிக்கும் மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது விளம்பரங்கள் எதையும் நம்ப வேண்டாம். சல்மான் கானின் பெயரை, மோசடி நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.