< Back
சினிமா செய்திகள்
முடிந்த அளவுக்கு தாண்டுகிறேன்  - கமல்ஹாசன் பகிர்ந்த தத்துவம்
சினிமா செய்திகள்

முடிந்த அளவுக்கு தாண்டுகிறேன் - கமல்ஹாசன் பகிர்ந்த தத்துவம்

தினத்தந்தி
|
1 March 2024 9:04 PM IST

கமல்ஹாசன் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன்- 2 திரைப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது. கமலின் 234வது படமான தக் லைப் படத்தினை மணிரத்னம் இயக்குகிறார். 237வது படத்தினை சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்.

கமல்235, 236 படங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் படம் 235-வதுதாக இருக்கலாம் அல்லது கல்கி 238 படம் இருக்கலாம் எனவும் 236வது படத்தினை லோகேஷ் இயக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் புதிய புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் கேமராவுடன் கையில் அலைபேசியுடனும் தாண்டுவது போன்ற ஸ்டைலான புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் "கலந்துகொள்வதன் மூலமாக கற்றுக்கொள்வது" பல விஷயங்களை வேகமாக கற்றுக்கொடுகிறது. அதனால் முடிந்த அளவுக்கு தாண்டுகிறேன். இந்த மறைமுகமான ஆதாரப்புள்ளி நமது எடையை உட்புறமாக இழுக்கிறது எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்