< Back
சினிமா செய்திகள்
கசியும் புகைப்படங்கள்: விஜய்யின் படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்
சினிமா செய்திகள்

கசியும் புகைப்படங்கள்: விஜய்யின் படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றம்

தினத்தந்தி
|
18 Jun 2022 2:40 PM IST

விஜய் நடிக்கும் புதிய படத்தின் தோற்றம் வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது.

பீஸ்ட் படத்துக்கு பிறகு விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பின்னர் சென்னை கானாத்தூர் அருகே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். படப்பிடிப்பை காண ரசிகர்களும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் திரண்டனர். படத்தின் கதை களம் மற்றும் விஜய் தோற்றத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். ஆனால் யாரோ திருட்டுத்தனமாக படப்பிடிப்பில் இருந்து விஜய் தோற்றத்தை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். பின்னர் படப்பிடிப்பு அரங்கு புகைப்படமும் வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் செல்ல முடியாத ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகருக்கு மாற்றி உள்ளனர்.

மேலும் செய்திகள்