< Back
சினிமா செய்திகள்
இணையதளத்தில் நயன்தாராவின் பாடல் காட்சி வீடியோ கசிந்தது
சினிமா செய்திகள்

இணையதளத்தில் நயன்தாராவின் பாடல் காட்சி வீடியோ கசிந்தது

தினத்தந்தி
|
14 April 2023 3:26 PM IST

நயன்தாரா ஜவான் இந்தி படத்தில் நடித்த காட்சியும் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் நடிகைகளின் தோற்றங்கள் வெளியாகாமல் இருக்க சினிமா படப்பிடிப்புகளை இயக்குனர்கள் பலரும் ரகசியமாக நடத்தி வருகிறார்கள். அதையும் மீறி படக்காட்சிகளை சிலர் திருட்டுத்தனமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாரா ஜவான் இந்தி படத்தில் நடித்த காட்சியும் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் ஷாருக்கான் நயன்தாரா நடித்த பாடல் காட்சியொன்றை மும்பையில் படமாக்கினர்.

சொகுசு படகில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. படகின் மேற்பகுதியில் நின்று இருவரும் நடனம் ஆடி நடித்தனர். இதனை யாரோ தொலைவில் இருந்து திருட்டுத்தனமாக வீடியோவில் படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார். இது வைரலாகி வருகிறது.

ஜவான் படத்தின் முக்கிய பாடல் காட்சி வீடியோ இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்