< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
2-ம் பாகம் படத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா
|22 Sept 2023 10:20 AM IST
`ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் படமாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ளார்.
பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லரை தமிழில் தனுஷ், தெலுங்கில் மகேஷ்பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர். தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஆக்ஷன், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஜிகர்தண்டா 2 படம் முதல் பாகத்தை போலவே வித்தியாசமான படமாக உருவாகி உள்ளது என்கின்றனர்.