'சூப்பர் ஸ்டார் பட்டம் மோதல் வேண்டாம்' ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்
|கதாநாயகர்களின் ரசிகர்கள் வலைத்தளத்தில் சூப்பர் ஸ்டார் யார் என்பதில் தொடர்ந்து மோதிக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் பட நிகழ்ச்சியில் பேசும்போது, "சூப்பர் ஸ்டார் பிரச்சினை இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது கேட்டிருக்கிறாரா?
நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் ரஜினி நலமுடன் இருக்கிறாரா? என்றுதான் முதலில் கேட்பார். விஜய்க்கு, ரஜினி மீது மரியாதை இருக்கிறது. சூப்பர் ஸ்டாரை சந்தித்தபோது, 'பீஸ்ட்' படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வசூல் நன்றாக இருக்கிறது" என்று சொன்னார்.
இந்த இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நடுவில் சில வியாபாரிகள்தான் தேங்காய் மரத்தில் மாங்காய் காய்க்கிறது என்று பிரச்சினை செய்து பிரிக்கிறார்கள். எல்லோரும் இங்கு அண்ணன்- தம்பிகளாய்.. ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரித்துவிடாதீர்கள்.'' என்றார்.