சந்திரமுகி-2 படத்தில் லாரன்ஸ், கங்கனா தோற்றம் கசிந்தது
|ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்த சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ரவிமரியா, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். படவேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சந்திரமுகி 2-ம் பாகத்தில் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டதாக கங்கனா ரணாவத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் ஆகியோர் மேக்கப்புடன் இருக்கும் புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது லாரன்சின் வேட்டையன் மற்றும் கங்கனாவின் சந்திரமுகி தோற்றம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சந்திரமுகி படத்தில் வரும் ரஜினிகாந்தின் வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக வலைத்தளத்தில் பலரும் பேசத் தொடங்கி உள்ளனர். இந்த புகைப்படத்தை யாரோ திருட்டுத்தனமாக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.