< Back
சினிமா செய்திகள்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் தமிழ் படத்தில் ஜான்வி கபூர்?
சினிமா செய்திகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் தமிழ் படத்தில் ஜான்வி கபூர்?

தினத்தந்தி
|
8 July 2023 12:10 PM IST

நயன்தாராவின் கணவரான டைரக்டர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ள நிலையில், அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கவும் ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அவர் சொன்ன கதையில் திருப்தி கொள்ளாத தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை கைவிட்டு விட்டது. அவருக்கு பதிலாக அஜித்குமார் படத்தை இயக்க மகிழ்திருமேனியை தேர்வு செய்து விட்டனர். இது விக்னேஷ் சிவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து லவ்டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்ய இருக்கிறார்.

இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், இந்தி நடிகையுமான ஜான்வி கபூரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று தெரிகிறது. தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்