< Back
சினிமா செய்திகள்
லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியீடு - படக்குழு அறிவிப்பு
சினிமா செய்திகள்

'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியீடு - படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Jan 2024 4:27 PM IST

’லால் சலாம்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'லால் சலாம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்