< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'நான் நடிகையாவதற்கு என் குடும்பமே...'- லட்சுமி மஞ்சு
|21 Jun 2024 9:28 PM IST
நடிகை லட்சுமி மஞ்சு தமிழில் 'கடல்', 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு, தமிழில் மணிரத்னம் இயக்கிய 'கடல்', ராதா மோகன் இயக்கிய 'காற்றின் மொழி' படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தான் நடிகையாவதற்கு தனது குடும்பம் தடையாக இருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
'நான் நடிகையாவதற்கு என் குடும்பம் ஒரு தடையாக அமைந்தது. என் அப்பாவிற்கு நான் நடிகையாவதில் துளியும் விருப்பம் கிடையாது. தென்னிந்திய நடிகர்கள் தங்கள் தங்கையோ, மகளோ நடிகையாக விரும்புவதில்லை. இது தெற்கே மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ளது.' என்றார்.
நடிகை லட்சுமி மஞ்சு இப்படி பேசி இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் சில நடிகைகளே தங்கள் குடும்பத்தால் இதுபோன்ற எதிர்ப்பை எதிர்கொண்டதை பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.