இரண்டு மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்களை இயக்கும் சகுனி பட இயக்குனர்
|நடிகர் யோகி பாபு மற்றும் மூத்த காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் தான் ‘ குழந்தைகள் முன்னேற்ற கழகம் '.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. டாக்டர் படத்திலும் அவர் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் "சகுனி". முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் புகழ்பெற்ற இயக்குனர் தான் சங்கர் தயாள். இந்நிலையில் சுமார் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைத்துறையில் அவர் இயக்குனராக களமிறங்குகின்றார்.
"குழந்தைகள் முன்னேற்ற கழகம்" என்கின்ற தலைப்பில், இந்த புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார் சங்கர் தயாள். மேலும் இந்த திரைப்படத்தில் இரண்டு மிகப்பெரிய காமெடி ஜாம்பவான்களை ஒன்றிணைத்துள்ளார் சங்கர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகரான செந்தில் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அதேபோல் தற்பொழுது ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் யோகி பாபு அவர்கள், செந்தில் அவர்களோடு இணைந்து இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்பொழுது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.