< Back
சினிமா செய்திகள்
நடிகர் நாகார்ஜுனா பிறந்தநாளை முன்னிட்டு குபேரா சிறப்பு போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

நடிகர் நாகார்ஜுனா பிறந்தநாளை முன்னிட்டு 'குபேரா' சிறப்பு போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
29 Aug 2024 6:07 PM IST

நடிகர் நாகார்ஜுனா பிறந்தநாளை முன்னிட்டு ‘குபேரா’ சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சென்னை,

நடிகர் தனுஷ் தனது 51-வது படமான 'குபேரா' வில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இதில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்திற்கு 'குபேரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நடிகர் நாகார்ஜுனா தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் 'குபேரா' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.. இந்த நிலையில், நடிகர் நாகார்ஜுனா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதியில் 'குபேரா' திரையில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்