
image courtecy:instagram@kritisanon
வருண் தவான், ஷாஹித் கபூர் இல்லை... இவர்தான் எனக்கு பிடித்த நடிகர் - கிருத்தி சனோன்

கிருத்தி சனோன், நடிகர் பங்கஜ் திரிபாதியை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன். இவர் சமீபத்தில் நடித்த படம் 'க்ரூ'. மேலும், இப்படத்தில் கரீனா கபூர், தபு ஆகியோரும் நடித்தனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பெண்களை முதன்மைப்படுத்தி வெளியான இந்தி திரைப்படங்களில் முதல்நாளில் அதிகம் வசூலித்த திரைப்படம் இதுதான் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த கிருத்தி சனோன், நடிகர் பங்கஜ் திரிபாதியை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
'பரேலி கி பர்பி' படத்தில் பங்கஜ் திரிபாதி, கிருத்தி சனோனின் தந்தையாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவர்களது அப்பா-மகள் உறவு மிகவும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வருண் தவான், ஷாஹித் கபூர் ஆகியோருக்கு நடிகை கிருத்தி சனோன் சிறந்த நண்பராவார். இந்நிலையில், இவர்கள் இல்லாமல் பங்கஜ் திரிபாதியை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.
கிருத்தி சனோன் அடுத்ததாக கஜோல் மற்றும் ஷஹீர் ஷேக்குடன் 'தோ பட்டி' படத்தில் நடிக்கிறார்.