< Back
சினிமா செய்திகள்
நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது வியப்பாக உள்ளது - கிருத்தி சனோன்
சினிமா செய்திகள்

'நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது வியப்பாக உள்ளது' - கிருத்தி சனோன்

தினத்தந்தி
|
14 May 2024 10:22 AM IST

கிருத்தி சனோன் நடிப்பில் 'க்ரூ' என்ற இந்தி படம் சமீபத்தில் வெளியானது.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கிருத்தி சனோன் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் 'க்ரூ' என்ற இந்தி படம் வெளியானது.

இந்த நிலையில் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவது குறித்து கிருத்தி சனோன் கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களும் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆனால் நடிகைகளை விட நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது வியப்பாக இருக்கிறது.

நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் வழங்கப்படும் சம்பளத்தில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சில நேரங்களில் எந்த காரணமும் இல்லாமல் கூட நடிகர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். பத்து வருடங்கள் வெற்றிப்படங்கள் கொடுக்காத நடிகருக்கும் அதிக சம்பளம் வழங்குவது ஏன் என்று தெரியவில்லை.

தியேட்டர், தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமை போன்ற காரணங்களால் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு வழங்குவது இல்லை. நடிகைகளுக்கு குறைவாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது" என்றார்.

மேலும் செய்திகள்