சொக்க தங்கத்தை கண்டு கண்ணீர் விட்ட கவுண்டமணி..
|சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் விஜயகாந்தை கடைசியாக ஒருமுறை பார்த்து விட வேண்டும் என தேமுதிக அலுவலகத்தை நோக்கி குவிந்து வருகின்றனர்.
சென்னை,
சின்ன கவுண்டர், வைதேகி காத்திருந்தாள், சேதுபதி ஐபிஎஸ், சொக்க தங்கம் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த காமெடி ஜாம்பவான் கவுண்டமணி விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டதும் மனமுடைந்து போய் விட்டார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் கவுண்டமணி.
84 வயதாகும் கவுண்டமணி அதிகப்படியாக பொது இடங்களுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ வருகைத் தரமால் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், விஜயகாந்த் மறைவு அவரை வீட்டில் இருக்க விட்டுவைக்கவில்லை. துக்க செய்தி கேட்டதும் மனம் பொருக்க முடியாமல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்தின் உடலை நேரில் சென்று பார்த்து விட்டு மாலை அணிவித்து வந்துள்ளார்.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் விஜயகாந்தை கடைசியாக ஒருமுறை பார்த்து விட வேண்டும் என தேமுதிக அலுவலகத்தை நோக்கி குவிந்து வருகின்றனர். கோயம்பேடு முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கின்றன.
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் முன்பு உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.