< Back
சினிமா செய்திகள்
கோட்டிக்கார பயலே - கவுதம் கார்த்திக் படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'கோட்டிக்கார பயலே' - கவுதம் கார்த்திக் படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
20 Feb 2023 7:48 PM IST

கவுதம் கார்த்திக் நடித்துள்ள 'ஆகஸ்ட் 16, 1947' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில், நடிகர் கவுதம் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் 'ஆகஸ்ட் 16, 1947'. இந்த படத்தில் புதுமுகம் ரேவதி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சவுத்ரி ஆகியவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஒரு கிராமத்து இளைஞரை பற்றிய கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல, இந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு நாளுக்குப் பிறகு படத்தின் நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்த படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'கோட்டிக்கார பயலே' என்ற இந்த பாடலை பொன்குமார் எழுதியுள்ளார். மீனாட்சி இளையராஜா மற்றும் ஷான் ரோல்டன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்