"கோமாளி படத்தோட டைரக்டர் ஹீரோ ஆகிட்டாராம்" - வைரலாகும் 'லல் டுடே' படத்தின் புரோமோ வீடியோ
|இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு விஜய் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.