சமந்தா இவ்வளவு கோபக்காரரா?
|பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் நடத்திவரும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் உடன் பங்குபெற்ற நடிகை சமந்தா, விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார்.
தென் இந்தியாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருக்கிறார் சமந்தா. விவாகரத்துக்கு பிறகு முழுமூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 'புஷ்பா' படத்தில் 'ஊ... சொல்றியா மாமா' பாடலுக்கு இவரது வளைவு நெளிவான நடனம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இதனால் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தி படங்களில் நடிக்கவும் சமந்தாவுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமந்தா, நடிகர் அக்ஷய்குமாருடன் இந்தி பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது சமந்தாவிடம், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சமந்தா, ''வேண்டுமென்றால் எங்களை ஒரே அறையில் அடைத்து வையுங்கள். ஆனால் அங்கு கூர்மையான பொருட்கள் எதுவும் இருக்கக்கூடாது. இந்த பதில் போதுமா?'' என்று கேட்டார். இந்த பதிலே நாக சைதன்யா மீதான அவரது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. படத்தில் வரும் அழுகை காட்சியில் கூட சிரித்த முகமாக இருக்கும் சமந்தா, கோபம் கொப்பளிக்க இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 'சமந்தா ரொம்ப கோபக்காரராக இருப்பாரோ...' என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கிசுகிசுத்து கொண்டனர்.