< Back
சினிமா செய்திகள்
கிஷன் தாஸ் நடிக்கும் தருணம் திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்
சினிமா செய்திகள்

கிஷன் தாஸ் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
8 Jun 2023 12:27 AM IST

'தருணம்' திரைப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை,

'தேஜாவு' படத்தின் இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்நிலையில், 'தருணம்' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்