மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த கிரண்...!
|தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கிரண் ரத்தோட் இன்ஸ்டாகிராமில் மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சென்னை,
சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலைபோல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை துள்ள வைத்தார்.
இதனையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். தொடர்ந்து நடிகை கிரணுக்கு படவாய்ப்புகள் குறைந்ததால் தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கி கவர்ச்சி காட்டி சம்பாதித்தார்.
சில நாட்களுக்கு முன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரே வாரத்தில் எவிக்ட்டாகி வெளியேறினார்.
இந்தநிலையில், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து அதகளப்படுத்தி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சி போட்டோவிற்கு லைக்குகள் குவிந்தாலும் சிலர் இந்த வயதில் இது தேவைதானா என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.