வெப் தொடர்களைவிட சினிமாவில்தான் 'கிக்' - நடிகை ராஷி கன்னா
|தமிழில் அடங்க மறு, இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
சமீபத்தில் பார்சி என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். சினிமா, வெப் தொடர் வித்தியாசங்கள் குறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், "சினிமாவுக்கும் வெப் தொடர்களுக்கும் நடிப்பு விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. படப்பிடிப்பு சூழல் ஒரே மாதிரி தான் இருக்கும்.
ஆனால் சினிமாவில் நடித்தால் வரும் 'கிக்'கே வேறு. தியேட்டர்களில் திரையில் நம்மை நாம் பார்த்துக் கொள்வது மிகச்சிறந்த அனுபவம். அதனால் எனது முதல் முக்கியத்துவம் சினிமாவிற்குத்தான். ஓடிடி தொடர்களில் பயிற்சிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். நல்ல கரு உள்ள கதைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் முடியும்'' என்றார்.