< Back
சினிமா செய்திகள்
கிச்சா சுதீப்பின் பில்லா ரங்கா பாஷா படத்தின் கான்செப்ட் வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

கிச்சா சுதீப்பின் 'பில்லா ரங்கா பாஷா' படத்தின் கான்செப்ட் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
2 Sept 2024 4:38 PM IST

நடிகர் கிச்சா சுதீப் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இயக்குனர் அனுப் பண்டாரியுடன் நடிகர் கிச்சா சுதீப் இணைந்துள்ளார். இப்படத்திற்கு, 'பில்லா ரங்கா பாஷா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஹனுமான் படத்தின் மூலம் புகழ் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தநிலையில் நடிகர் கிச்சா சுதீப் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை சிறப்பிக்கும் வகையில், 'பில்லா ரங்கா பாஷா' படத்தின் கான்செப்ட் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது, அவரது ரசிகர்கள் அவரது வரவிருக்கும் படங்கள் குறித்த அப்டேட்டை கேட்பது போல வீடியோ தொடங்குகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மேலும் இந்த படம் கி.பி 2209-ம் ஆண்டு பின்னணியில் எடுக்கப்படும் என்றும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்