< Back
சினிமா செய்திகள்
சலார் 2 : முக்கிய பாத்திரத்தில் இவர் இல்லை?- வெளியான தகவல்
சினிமா செய்திகள்

'சலார் 2' : முக்கிய பாத்திரத்தில் இவர் இல்லை?- வெளியான தகவல்

தினத்தந்தி
|
26 April 2024 1:21 PM IST

'சலார் 2' படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்தார். மேலும், வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்தார். கே.ஜி.எப். படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரித்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் 2-வது பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சமீபத்தில் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அவருக்கு சலார் படத்தின் 2-வது பாகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இதுவரை அழைப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன்மூலம் முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியாரா அத்வானி தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்