< Back
சினிமா செய்திகள்
கவர்ச்சி நடிகை கியாரா அத்வானிக்கு விரைவில் திருமணம்?
சினிமா செய்திகள்

கவர்ச்சி நடிகை கியாரா அத்வானிக்கு விரைவில் திருமணம்?

தினத்தந்தி
|
5 Aug 2022 2:20 PM IST

நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆடம்பரமாக கொண்டாடி இருக்கிறார்.

துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது காதலியின் பிறந்தநாளை, அவர் வியக்கும் அளவு பிரமாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வாழ்த்துகளை பெற்று வருகிறது.

காதலர்களான இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவீட்டாரும் திருமண பேச்சை தொடங்கி விட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கியாரா அத்வானி, ராம் சரண் ஜோடியாக ஷங்கர் டைரக்டு செய்து வரும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்