பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பு முதல் தீபிகா படுகோன் வரை 9 பிரபலங்கள்
|குஷ்பு முதல் தீபிகா படுகோன் வரை 9 பிரபலங்கள் தங்கள் பாலியல் துஷ்பிரயோக அனுபவங்களைப் வெளிப்படையாக கூறி உள்ளார்.
மும்பை
1. குஷ்பு சுந்தர்:
பர்கா தத்துடனான தனது உரையாடலின் போது அரசியல்வாதியாக மாறிய மூத்த நடிகையான குஷ்பு சுந்தர் கூறும் போது ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பெண் அல்லது பையனை என்பது அல்ல. என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார். தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன். எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு இருந்தது" என்று கூறி உள்ளார்.
2. தீபிகா படுகோன்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனக்கு 14 - 15 வயதாக இருந்தபோது துன்புறுத்தப்பட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தின் விவரங்களைப் பற்றி அவர் பேசும் போது தீபிகா,
நான் என் அம்மா பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு மனிதன் என்னை சீண்டினான்அந்த நேரத்தில், அதைப் புறக்கணித்து, அது நடக்காதது போல் நடித்திருக்கலாம். ஆனால் நான் அவனை பின்தொடர்ந்தேன் அந்த நபர் சட்டை காலரை பிடித்து அவனது கன்னத்தில் அறைந்தேன். பின்னர் நான் என் பாதையில் நடந்தேன் என கூறி இருந்தார்.
3.நடிகை சோனம் கபூர்
நடிகை சோனம் கபூர் 13 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பலியானதாக என்று கூறி இருந்தார். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் மும்பையில் உள்ள கெயிட்டி கேலக்ஸி தியேட்டரில் நடந்தது. இதைப் பற்றி பேசிய சோனம், "ஒரு மனிதர் பின்னால் இருந்து வந்து என் மார்பகங்கள் மீது கை வைத்தார். மேலும், அந்த நேரத்தில் நான் நடுங்க ஆரம்பித்தேன். என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அங்கேயே அழ ஆரம்பித்தேன். என கூறி இருந்தார்.
4. சுஷ்மிதா சென்
முன்னாள் மிஸ் யுனிவர்ஸ், சுஷ்மிதா சென், விருது நிகழ்ச்சி ஒன்றில் 15 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தப்படுவது குறித்து மனந்திறந்தார்.சுஷ்மிதா சிறுவனை பிடித்து, கூட்டத்திலிருந்து வெளியே இழுத்து வந்து மோசமான விளைவுகளைப் பற்றி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
5.ஸ்வேரா பாஸ்கர்
நடிகை ஸ்வேரா பாஸ்கர் சல்மான் கான் நடித்த திரைப்படமான பிரேம் ரத்தன், தனன் பயோ படப்பிடிப்பின் போது ராஜ்கோட் விமான நிலையத்தில் அவர் பாலியல் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அப்போது மூத்த நடிகர் அனுபம் கேர் தன்னை மீட்டதாக கூறினார்.
6.கல்கி
கல்கி ஒன்பது வயதாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினார். ஆனால் அவர் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதிடுவதற்கும், அவர்களை மீண்டும் போராட ஊக்குவிப்பதற்கும் பாடுபட்டு வருகிறார்.
7.பிபாஷா பாசு
பிபாஷா பாசு ஒரு பேட்டியின் போது மும்பையில் ஒரு இரவு விடுதியில் பாலியல் துன்புறுத்தப்பட்டதாக வெளிப்படுத்தினார். , பிபாஷா ஜானுடன் ஒரு இரவு விடுதிக்கு சென்றார். அப்போது ஒருவர் அவரை பாலியல் ரீதியாக தீண்டிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அவர் அவனைப் பிடித்து அவனை அடித்ததாக கூறி இருந்தார்.
8. பியுஷ் மிஸ்ரா
மூத்த நடிகர் பியுஷ் மிஸ்ரா தனது இளமைகாலத்தில் ஒரு பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினார். அவர் ஏழாவது படிக்கும் போது இந்த சம்பவம் நடந்தது என்று கூறினார். மேலும் அந்த பாலியல் வன்கொடுமை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு துன்பத்தை கொடுத்தது. நான் யாருக்கும் எதிராக பழிவாங்கவோ அல்லது யாரையும் காயப்படுத்தவோ விரும்பவில்லை என கூறி இருந்தார்.
9. அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் கருத்துப்படி பெண்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என கூறினார்
"எனக்கு ஆறு வயதாக இருந்தபோது நான் என் பக்கத்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன் அப்போது லிப்ட் மேன் என் பின்னால் தொட்டார். " என்று அக்ஷய் பெண்களின் பாதுகாப்பு குறித்த மாநாட்டின் போது குறிப்பிட்டார், அவரது குழந்தை பருவத்திலிருந்தே ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்தார். அவர் மேலும் கூறுகையில், "நான் கிளர்ந்தெழுந்தேன், என் தந்தைக்கு தகவல் கொடுத்தேன். எனது தந்தை போலீசில் புகார் அளித்தார். லிப்ட்மேனை சிறை சென்றார் என கூறினார்.