ரஜினியை சந்தித்த குஷ்பு
|ரஜினிகாந்தை, நடிகை குஷ்பு திடீரென்று சந்தித்து பேசினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்து. ரஜினியை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில் ''ஒரு கப் தேநீர் மற்றும் சிரிப்புடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சாதாரண சந்திப்பு. அந்த தருணம் மகிழ்ச்சி, உற்சாகத்தை அளித்தது. உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றி ''என்று கூறியுள்ளார்.
ரஜினியும், குஷ்புவும், அண்ணாமலை, மன்னன், அண்ணாத்த ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் லைகா தயாரிக்கும் 2 புதிய படங்களில் ரஜினி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய படத்தில் குஷ்புவும், ரஜினியுடன் நடிக்கிறாரா, அதற்கான சந்திப்புதானா இது என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.