அஜய்தேவ்கனை சந்தித்த குஷ்பு
|குஷ்பு பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கனை சந்தித்தார்.
தமிழ் திரை உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த குஷ்பு தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கில் தயாராகும் விஜய்யின் வாரிசு படத்திலும் நடிக்கிறார். பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபடுகிறார். சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் குஷ்பு பிரபல இந்தி நடிகர் அஜய்தேவ்கனை சந்தித்தார். அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், "எனது கதாநாயகனை சந்தித்ததன் மூலம் கனவு நிறைவேறி இருக்கிறது. அவருடைய எளிமையும், பணிவும் என்னை வியக்க வைத்தது. அவரிடம் போலித்தனம் எதுவும் இல்லை. அவரை சந்தித்தது நல்ல அனுபவம். உங்கள் நேரத்துக்கும், அன்பிற்கும் எனது நன்றிகள். விரைவில் மீண்டும் அஜய்தேவ்கனை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அஜய்தேவ்கன் ஏற்கனவே சூர்யாவின் சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். தற்போது கார்த்தியின் கைதி இந்தி பதிப்பில் நடித்து வருகிறார்.