< Back
சினிமா செய்திகள்
கமல் ஹாசனின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

கமல் ஹாசனின் 234-வது படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. புதிய அப்டேட்

தினத்தந்தி
|
14 Sept 2023 11:27 AM IST

இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 233வது படம் (KH233) ஆகும். இந்த படத்திற்காக கமல் ஹாசன் தயாராகி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்முன்பே, 234வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் நடிக்கும் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெறுகிறது.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிக்க ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன்-6 மற்றும் கமலின் 233வது படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குவதற்கு முன் 234வது படத்துக்கான புரோமோ படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த மாதமே படத்தின் அறிவிப்பு தொடர்பான டீசர் படமாக்கப்படலாம். 234வது படத்தின் படிப்பிடிப்பை அடுத்த ஆண்டு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்