< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அரசியலுக்கு வரும் நடிகர் யாஷ்?
|19 Dec 2022 4:12 PM IST
கன்னட நடிகர் யாஷ், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷை பெங்களூருவில் சந்தித்தார்.
கன்னடத்தில் தயாரான கேஜிஎப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. கேஜிஎப் 2-ம் பாகமும் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. 'கேஜிஎப்' படத்தில் கதாநாயகனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் யாஷ். இவருக்கு அனைத்து மாநிலங்களிலும் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் யாஷ் அரசியலுக்கு வர முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திரபிரதேச சட்ட மேலவை உறுப்பினர் நாரா லோகேஷை நேரில் சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். இதன் மூலம் யாஷ் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனாலும் யாஷ் அரசியலில் ஈடுபடுவதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை.