< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மீண்டும் இயக்குனராகும் கே.ஜி.எப் இசையமைப்பாளர்
|24 Aug 2024 7:12 AM IST
கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்து பிரபலமானவர் ரவி பஸ்ரூர்
சென்னை,
யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான படம் கே.ஜி.எப். ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இப்படத்தைபோல இதில் வரும் இசையும் ஹிட்டானது. இதனால், ரவி பஸ்ரூரின் பெயர் நாடு முழுவதும் பேசப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பிரபாஸ், சுருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் வெளியான சலார் படத்திற்கும் இசையமைத்தார். இவ்வாறு பிரபல இசையமைபாளராக இருக்கும் ரவி பஸ்ரூர் சில படங்களை இயக்கியும் உள்ளார்.
கர்கார் மண்டாலா, கிர்மித், கடகா உள்ளிட்ட 5 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், மீண்டும் கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு 'வீர சந்திரஹாசா' என்று பெயரிடப்பட்டுள்ளது.