< Back
சினிமா செய்திகள்
கே.ஜி.எப் பட நடிகர் மரணம்
சினிமா செய்திகள்

'கே.ஜி.எப்' பட நடிகர் மரணம்

தினத்தந்தி
|
9 Dec 2022 8:03 AM IST

‘கே.ஜி.எப்’ பட நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

யஷ் நடிப்பில் கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட கே.ஜி.எப் படத்தின் இரண்டு பாகங்களும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் கிருஷ்ணா ஜி.ராவ். மேலும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கிருஷ்ண குமார் இயக்கிய நானோ நாராயணப்பா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. மேலும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பல படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். கிருஷ்ணா ஜி.ராவுக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறலும் இருந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

மேலும் செய்திகள்