< Back
சினிமா செய்திகள்
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் மீண்டும் இணையும் அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா?
சினிமா செய்திகள்

"மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில்" மீண்டும் இணையும் அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா?

தினத்தந்தி
|
25 July 2024 9:54 PM IST

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் அயர்ன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கூறியுள்ளார்.

மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா இந்த குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கு மட்டுமே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

ஆனால், 2019-ம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தில் அயர்ன் மேன் உயிரிழந்து விட்டதாலும் மற்றும் கேப்டன் அமெரிக்கா வெளியேறியதாலும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் களையிழந்து காணப்படுகிறது. அதனை சரிசெய்யும் விதமாக தற்போது, மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ப்பைஜின் சமீபத்திய பேட்டியின் போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ராபர்ட் டவுனி ஜூனியரின் அயர்ன் மேன் மற்றும் கிறிஸ் எவன்ஸின் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரங்கள் மீண்டும் திரைக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் ரசிகர்கள் தங்களின் பிடித்த ஹீரோக்களை மீண்டும் திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

இந்தநிலையில், நாளை வெளியாக உள்ள 'டெட்பூல் & வால்வரின்' படத்தில் வால்வரின் மீண்டும் வருவதை போல, அயர்ன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரங்களை மீண்டும் கொண்டு வருவது சவாலானதாக இருந்தாலும், அதைச் சரியாக செய்ய மார்வெல் ஸ்டியோ கடுமையாக உழைத்து வருவதாகவும், கூறியுள்ளார். ஆனால் இதுவரை கெவின் ப்பைஜின் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்