வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் கீர்த்தி சுரேஷ்... 'ரகு தாத்தா' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு...!
|'ரகு தாத்தா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் 'ரகு தாத்தா' படத்தின் கிளிம்ஸ் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. அதனை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், 'நகைச்சுவையின் சூறாவளி உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளை தாக்க உள்ளது. ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வைக்க வருகிறது, ரகு தாத்தா. விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்' என்று பதிவிட்டுள்ளார்.