ஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ்
|தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது வருண் தவானின் 18-வது படமாகும். காளிஸ் இயக்குகிறார்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் குஷியில் கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். இதனால் படப்பிடிப்பில் சுறுசுறுப்பாக இருக்கிறாராம்.
இந்தநிலையில் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடிகர் வருண் தவானுடன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக ஆட்டோவில் வலம் வந்துள்ளார். மும்பையின் முக்கிய சாலைகளில் ஆட்டோவில் இந்த ஜோடி சுற்றி வந்துள்ளனர்.
ஆட்டோவில் வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் பயணிப்பதை பார்த்த ரசிகர்களும், சக பயணிகளும் ஆச்சரியம் கொண்டனர். சில குறும்புக்கார ரசிகர்கள் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்தே சென்றனர்.
படப்பிடிப்புக்கிடையே ஆட்டோவில் ஜாலியாக ஒரு ரைடு செல்ல கீர்த்தி சுரேஷ் விருப்பப்பட்டாராம். அவரது விருப்பத்தை வருண் தவான் உடனடியாக நிறைவேற்றியும் விட்டாராம்.
வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் பயணித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் தமிழில் 'சைரன்', 'ரகு தாத்தா', 'ரிவால்வர் ரீட்டா', 'கன்னிவெடி' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.