ஜான்வியுடன் செல்பி எடுத்த கீர்த்தி சுரேஷ்
|ஐதராபாத் விமான நிலையத்தில் ஜான்வியை கீர்த்தி சுரேஷ் கட்டி அணைத்தபடி எடுத்த செல்பி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகளும், இந்தி நடிகையுமான ஜான்வி கபூரும், நடிகை கீர்த்தி சுரேசும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை ஜான்வியும், ஜான்வி படங்களை கீர்த்தி சுரேசும் உடனுக்குடன் பார்த்து ஒருவரையொருவர் பாராட்டுவது உண்டு. இந்த நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் கீர்த்தி சுரேசும், ஜான்வி கபூரும் எதிர்பாராதவிதமாக திடீரென்று சந்தித்துக்கொண்டனர். உடனே ஜான்வியை கீர்த்தி சுரேஷ் கட்டி அணைத்தபடி அவரோடு செல்பி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் வைரலாகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன், ஜெயம் ரவியுடன் சைரன், தெலுங்கில் சிரஞ்சீவியின் போலோ சங்கர், நானியுடன் தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யுடன் நடிக்க பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.