துபாய் தொழிலதிபரை மணக்கிறாரா கீர்த்தி சுரேஷ்...? அவரே அளித்த பதில்
|கீர்த்தி சுரேஷ், துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் பர்கான் பின் லியாக்வாத் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
சென்னை
தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'மாமன்னன்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர 'ரிவால்வர் ரீட்டா' மற்றும் 'சைரன்' ஆகிய படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் மலையாள தொழிலதிபரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
கீர்த்தி சுரேஷ், துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் பர்கான் பின் லியாக்வாத் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
கீர்த்தி மற்றும் பர்கான் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கீர்த்தியின் துபாய் விடுமுறையின் போது இருந்து எடுக்கப்பட்ட படம் அது . பர்கான் பகிர்ந்த படத்தை கீர்த்தி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக உருவாக்கியுள்ளார். இதனால் தான் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பதில் அளித்து உள்ளார்.இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "ஹா ஹா இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய நண்பர். அவர் தனது வருங்கால கணவர் இல்லை என்றும் என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன், அதுவரை பொறுமையாக இருங்கள்" என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்
நேரம் வரும்போது எனது வாழ்க்கையின் உண்மையான மர்ம மனிதன் யார் என்பதை வெளிப்படுத்துவேன் என்று நடிகை டுவீட் செய்துள்ளார்.