சிரசாசனம் யோகா செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய கீர்த்தி சுரேஷ்
|நான் கடவுள் ஆர்யா போல வெட்டவெளியில் சிரசாசனம் யோகா செய்து கீர்த்தி சுரேஷ் அசத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ். இந்தி திரையுலகிலும் தற்போது அறிமுகமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக அவர் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வர இருக்கிறது. சினிமா மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்தில் தீவிர அக்கறை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். உடற்பயிற்சி செய்வதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தலைகீழாக நின்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது வலைத்தள பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தலை கீழாக நின்று யோகாசனம் செய்துக் கொண்டு இருக்கிறார்.அவருக்கும் பக்கத்தில் அவரின் நாய் குட்டி அழகாக நின்றுக் கொண்டு இருக்கிரது.
பொதுவாகவே சிரசாசனம் எனப்படும் தலைகீழாக நின்று யோகா செய்யும் ஆசனத்தை பலரும் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு சுவற்றின் உதவியோடு செய்வது வழக்கம். ஆனால், 'நான் கடவுள்' ஆர்யா போல வெட்டவெளியில் தோட்டத்தில் தலைகீழாக நின்று யோகாசனம் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.