< Back
சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தின் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
14 Jan 2023 10:50 PM IST

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு வெளியான 'சாணிக் காயிதம்' திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. அதே போல் தெலுங்கில் 'சர்காரு வாரி பாட்டா', மலையாளத்தில் 'வாஷி' உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இதையடுத்து தெலுங்கில் நானியுடன் 'தசரா' படத்திலும், தமிழில் 'மாமன்னன்' படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இரண்டு படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படம் 'ரிவால்வர் ரீட்டா' என பெயரிப்பட்டுள்ளது. இயக்குநர் சந்துரு இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மேலும் செய்திகள்