< Back
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தினை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தினை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்

தினத்தந்தி
|
14 Jun 2024 7:13 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ படத்தினை தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இது விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மகாராஜா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1915க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: மகாராஜா படத்தினைப் பார்த்து விட்டு வெளியே வருகிறேன். அறிவார்ந்த திரைக்கதை. நித்திலன் நீங்கள்தான் படத்தின் நாயகன். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு பெருமிதம். 50-வது படத்தினை குறிப்பிட இதுதான் சிறந்த வழி விஜய் சேதுபதி சார். உங்களை எப்போது திரையில் பார்த்தாலும் அது விருந்துதான். அனுராக் காய்ஷய் சார் தீயான நடிப்பு. நீண்ட நாள்களுக்குப் பிறகு அபிராமி மேடமை பார்ப்பது நன்றாக இருந்தது. மம்தா சேச்சிக்கு அதிக அன்புகள். பிலோமின் எடிட்டிங் அற்புதம். எங்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்தது. இனி புர்ஜி டூ ஹாலிவுட்தான் நண்பா ஜெகதீஷ். படக்குழுவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

ரிவால்வர் ரீட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக புரமோஷன் வேலைகளை பார்த்துக் கொண்ட ஜெகதிஷுக்கும் தனது நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். புர்ஜ் டு ஹாலிவுட் தான் என கீர்த்தி சுரேஷ் புர்ஜ் கலிபாவில் புரமோஷன் செய்ததை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்