விருந்து நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்ற கீர்த்தி சுரேஷ்- ரசிகர்கள் அதிர்ச்சி
|நடிகர் வருண் தவான் தனது பிறந்தநாளையொட்டி படக்குழுவினருக்கு விருந்து கொடுத்தார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியாகவும் முத்த காட்சிகளிலும் நடிப்பதை தவிர்த்தார்.
தற்போது இவர் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படம் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். படத்துக்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டுள்ளது. வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 14-ம் தேதி பூஜையுடன் தொடங்கின. தமன் இசையமைக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், நடிகர் வருண் தவான் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி படக்குழுவினருக்கு வருண் தவான் விருந்து கொடுத்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் வலைத்தளத்தில் வைரலாகின.
இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தி படங்களில் வாய்ப்பு பிடிக்க கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.