< Back
சினிமா செய்திகள்
சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன கீர்த்தி சுரேஷ்
சினிமா செய்திகள்

சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன கீர்த்தி சுரேஷ்

தினத்தந்தி
|
31 Oct 2022 4:05 PM IST

சமந்தாவின் தோழியான நடிகை கீர்த்தி சுரேஷ், அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அரியவகை நோய் பாதிப்பில் சிக்கி இருப்பது திரை உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும், இந்த நோய் குணமாக நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும்போல் தெரிகிறது என்றும் சமந்தாவே உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

நோய் பாதிப்பில் போராடி வருவதாகவும், இதன் மூலம் மோசமான நாட்களை எதிர்கொண்டு இருக்கிறேன் என்றும், விரைவில் குணம் அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். சமந்தா குணம் அடைய ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமந்தாவுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும் புகைப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளார். கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ''உனக்கு அதிகமான சக்தி கிடைக்கும். விரைவில் குணம் அடைந்து வலிமையோடு திரும்பி வருவாய்" என்று கூறியுள்ளார். மேலும் பல நடிகர்-நடிகைகளும் சமந்தா விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்