< Back
சினிமா செய்திகள்
கீர்த்தி ஷெட்டிக்கு நட்சத்திர நடிகரின் மகனால் தொடர் தொல்லை...? நடிகை பதில்
சினிமா செய்திகள்

கீர்த்தி ஷெட்டிக்கு நட்சத்திர நடிகரின் மகனால் தொடர் தொல்லை...? நடிகை பதில்

தினத்தந்தி
|
11 July 2023 12:46 PM IST

நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு நட்சத்திர நடிகர் ஒருவரின் மகன் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்ற செய்திகள் வைரலாக பரவின.

சென்னை,

நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து சமீபத்தில் நடித்து வெளியான படம் கஸ்டடி. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த மே மாதம் 12-ந்தேதி படம் வெளிவந்தது.

எனினும், அந்த படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. இந்த நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு, நட்சத்திர நடிகரின் மகன் ஒருவர் தொடர்ச்சியாக தொல்லை அளித்து வருகிறார் என்று செய்திகள் கிளம்பின.

அந்த நபர் செல்ல கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வரும்படி கீர்த்தி ஷெட்டிக்கு தொடர்ச்சியாக தொலைபேசி வழி அழைப்புகள் வந்து உள்ளன. அந்த நபர் விடாமல் பின்தொடர்ந்து உள்ளார்.

நடிகையுடன் நட்பு கொள்ள அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார். ஆனால், இதனை கீர்த்தி ஷெட்டி விரும்பவில்லை என்று கூறப்பட்டது. அது யாராக இருக்க கூடும் என்று ரசிகர்கள் மத்தியில் யூகங்கள் பரவின. அதுபற்றிய மீம் ஒன்றும் வைரலானது.

இந்த செய்தி வைரலாக பரவியதும், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கீர்த்தி தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்து உள்ளார். அதில், அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து பதிலளித்து உள்ளார்.

அந்த பதிவில், தயவு செய்து கற்பனையாக இதுபோன்று விசயங்களை புனைய வேண்டாம். தவறான தகவலை பரப்பாமல் நிறுத்தி கொள்ளவும். இது ஓர் அடிப்படையற்ற புரளி என்பதற்காக, இதனை தவிர்த்து விட நினைத்தேன். ஆனால், இந்த புரளி பல மடங்காக வெடித்து, பரவி வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.

ஹிருத்திக் ரோஷனுடனான படத்தில் நடித்து திரை துறைக்கு அறிமுகம் ஆனார் கீர்த்தி ஷெட்டி. ஆனால், தெலுங்கில் உப்பென்னா என்ற அவரது அறிமுக படம் அவருக்கு ரசிகர்களிடையே பெயர் வாங்கி தந்தது. அவர் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து, ஜெனீ என்ற தமிழ் படத்தில் அடுத்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்