< Back
சினிமா செய்திகள்
கயல் ஆனந்தி நடித்துள்ள ஒயிட் ரோஸ் படத்தின் புதிய பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

கயல் ஆனந்தி நடித்துள்ள 'ஒயிட் ரோஸ்' படத்தின் புதிய பாடல் வெளியானது

தினத்தந்தி
|
31 March 2024 3:42 PM GMT

'ஒயிட் ரோஸ்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. சமீபத்தில் இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ஆனந்தி நடித்து வெளியான 'மங்கை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள திரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'.

இந்த படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஶ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஒயிட் ரோஸ்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் பாடல் வெளியாகி உள்ளது. அதன்படி 'ஐ ஹேவ் அரைவ்ட் (I've Arrive) - நானே வந்தேன்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதர்சன் எம். குமார் எழுதியுள்ள இந்த பாடலை அஸ்வத், சுதர்சன் எம். குமார் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்