< Back
சினிமா செய்திகள்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் என்ன வித்தியாசம் - கயல் ஆனந்தியின் மங்கை டிரைலர் வைரல்
சினிமா செய்திகள்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் என்ன வித்தியாசம் - 'கயல்' ஆனந்தியின் மங்கை டிரைலர் வைரல்

தினத்தந்தி
|
7 Feb 2024 2:10 PM IST

மங்கை திரைப்படத்தில் ’கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.

சென்னை,

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இவர் தற்போது இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'மங்கை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, சாம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்

போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. கயல் ஆனந்தி தொடர்ந்து இது போன்ற துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கூறி வருகின்றனர்.


மேலும் செய்திகள்