தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' வீடியோ பாடல்
|நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சென்னை,
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.