< Back
சினிமா செய்திகள்
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் கவிதா...!
சினிமா செய்திகள்

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் கவிதா...!

தினத்தந்தி
|
27 Oct 2023 11:10 AM IST

நடிகை கவிதா 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க இருக்கிறார்.

சென்னை,

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவிதா. ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி, நீயா, எல்லாம் இன்பமயம், நாடோடித்தென்றல், செந்தமிழ்ப்பாட்டு, நாளைய தீர்ப்பு, அமராவதி. ரட்சகன் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்து இருக்கிறார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 380-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் வெளியான நாரதன் படத்தில் நடித்து இருந்தார். இந்தநிலையில் 6 வருட இடைவெளிக்குப் பிறகு கவிதா மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க இருக்கிறார். சில இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் குணசித்திர வேடத்தில் நடிக்க வைக்க அணுகி உள்ளனர்.

கவிதா கூறும்போது, "தமிழ் படங்கள் மீது எனக்கு எப்போதும் பற்று உண்டு. என்னை வளர்த்தது தமிழ் சினிமாதான். தற்போது தெலுங்கு, கன்னட மொழிகளில் 5 படங்களில் நடித்து வருகிறேன். தமிழ் படங்களிலும் நடிப்பேன்'' என்றார்.

மேலும் செய்திகள்