< Back
சினிமா செய்திகள்
கவினின் ஸ்டார் திரைப்படம் ஓடிடியில் வெளியானது
சினிமா செய்திகள்

கவினின் 'ஸ்டார்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

தினத்தந்தி
|
7 Jun 2024 4:46 PM GMT

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் கடந்த மே 10 அன்று திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் கடந்த மே 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் லால், கீதா கைலாசம், பிரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், வசூல் ரீதியாக வெற்றியை கண்டது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. இந்த நிலையில் 'ஸ்டார்' திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் தற்போது இயக்குனர் நெல்சன் தயாரிக்கும் 'பிளடி பெக்கர்', இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கும் 'மாஸ்க்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.



மேலும் செய்திகள்