கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படத்தின் டீசர் குறித்த அப்டேட்
|நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.
நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளடி பெக்கர்' . இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற 7ம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படம் வரும் 31-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதன்மூலம் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.