< Back
சினிமா செய்திகள்
ஸ்டார் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த கவின்

image courtecy:twitter@Kavin_m_0431

சினிமா செய்திகள்

'ஸ்டார்' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த கவின்

தினத்தந்தி
|
27 March 2024 7:34 AM GMT

‘ஸ்டார்’படத்தின் டப்பிங் பணிகளை கவின் நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

சமீபத்தில் 'ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை கவின் நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கவின் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்