< Back
சினிமா செய்திகள்
8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி
சினிமா செய்திகள்

8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி

தினத்தந்தி
|
18 March 2024 1:33 PM IST

நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் 80,90 களின் காலக்கட்டத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. தற்போது படங்களில் நடிப்பதை குறைத்திருந்தாலும் இன்று வரை இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவர் கடைசியாக "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்தநிலையில் 'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயரிடப்பட்டுள்ள முழுநீள நகைச்சுவை படத்தில் நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். சாய் ராஜகோபால் இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, ரவிமரியா, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டுடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். அங்கு தொடர்ந்து 8 மணி நேரம் உற்சாகமாக கவுண்டமணி டப்பிங் பேசியுள்ளார். இது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்